குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மணலூர்பேட்டையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் விளந்தை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாதுகாப்பு குறி்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஏட்டு கோகிலா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணத்தை தடுப்பதன் அவசியம் பற்றியும் விளக்கி கூறி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து மணலூர்பேட்டையில் உள்ள சுகாதார பயிற்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து குழந்தை திருமணம் நடைபெற இருந்தால், அது குறித்த தகவலை 1098 என்கிற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல் மணலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.