சிறுமி பலாத்காரம்; டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

சுரண்டை அருகே சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-08 19:45 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே கழுநீர்குளம் இருளப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய மகன் பெரியசாமி (வயது 35). லாரி டிரைவரான இவர் 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பழகி வந்தார். அப்போது அவர் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அவரை பெரியசாமி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து டாக்டர்கள், சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்