செஞ்சேரிப்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

செஞ்சேரிப்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.;

Update: 2022-07-02 14:32 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூரில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கூட்டம் நடந்தது. இதற்கு எஸ்.கே.டி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பரிமளாதேவி வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்க கள அலுவலர் தீபா, குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல், நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் தத்தெடுக்கும் முறை பற்றி விளக்கி கூறினார். இதில், குழந்தைகளின் பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்