குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

நீடாமங்கலம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவரும், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். குழுவின் செயலாளரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான பாலசுப்பிரமணியன், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் சம்பூர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர்கள் கீழாளவந்தசேரி ரூபாவதி, பரப்பனாமேடு சுசித்ரா மற்றும் பள்ளி கல்வி துறை, மகளிர் திட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த குழுவின் பணி அமைய வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்