குழந்தை திருமணத்தை கண்காணிக்க குழு அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குழந்தை திருமணத்தை கண்காணிக்க குழு அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-06-03 18:45 GMT


சிதம்பரம், 

சிதம்பரத்தில் நடக்கும் குழந்தை திருமணங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். குழந்தை திருமண சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட குழுவினர் வாஞ்சிநாதன், பிரகாஷ், விஜய், செல்லையா, மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தை திருமணத்தை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உதயகுமார், மாவட்ட செயற்குழுவினர் ராமச்சந்திரன், தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்