கயத்தாறு யூனியன் அலுவலகத்தில்குழந்தை திருமண விழிப்புணர்வு கூட்டம்
கயத்தாறு யூனியன் அலுவலகத்தில்குழந்தை திருமண விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி ஆணையாளர் அரவிந்தன் தலைமை தாங்கி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட சைல்ட்லைன் இணை ஒருங்கிணைப்பாளர் சங்கரேஸ்வரி, பணியாளர் ராமலட்சுமி மற்றும் ஒருங்கிணைந்த சேவைமைய ஒருங்கிணைப்பாளர் பிரியாதேவி, மற்றும் வட்டார அளவிலான நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.