தர்மபுரி அருகே 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்-கணவர்-தாய் கைது

Update: 2022-11-29 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்த கணவர் மற்றும் சிறுமியின் தாயை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

குழந்தை திருமணம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் ஊர் நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் புஷ்பாவதி. இவருக்கு தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புஷ்பாவதி மற்றும் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மேல் விசாரணை நடத்தப்பட்டது.

கணவர்-தாய் கைது

அப்போது 17 வயது சிறுமிக்கு முக்கல்நாயக்கன்பட்டியில் உள்ள நரசிம்மன் கோவிலில் வெங்கடாசலம் (வயது 29) என்ற தனியார் நிறுவன ஊழியருடன் கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. இதற்கு உறவினர்கள் சிலர் உடந்தையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊர் நல அலுவலர் புஷ்பாவதி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வெங்கடாசலம், அவருடைய பெற்றோர் சரோஜா, முத்துசாமி, சிறுமியின் தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த வெங்கடாசலம் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்