சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-11-17 18:45 GMT

காரைக்குடி, 

திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து உறவினரான அய்யப்பன் என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். அய்யப்பன் சிறுமியோடு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதன் காரணமாக அவர் கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியின் வயதை அறிந்த டாக்டர்கள் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலமைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் சிறுமி, அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிறுமியின் பெற்றோர் மற்றும் அய்யப்பன் மீது குழந்தை திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்