தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு வாகன பிரசாரம்

தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-10 14:32 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

வாகன பிரசாரம்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்

தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தையும், வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியையும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் உதவி ஆணையர்

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், தூத்துக்குடி நகரின் பிற பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முன்னிலையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, நிறுவன உரிமையாளர்களால் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் தூத்துக்குடி நகர பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த விதமான பணியிலும், 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியில் அமர்த்தக் கூடாது. அவ்வாறு பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் அபராதமோ, 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமே சேர்த்தும் விதிக்க நேரிடும் என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்