குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பிரசாரம்

பாபநாசத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Update: 2023-06-13 20:47 GMT

பாபநாசம்:

பாபநாசம் வட்டம், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில் அமைந்துள்ள குடிகாடு கிராமத்தில் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான நீதிபதி அப்துல்கனி உத்தரவின் பேரில் நடந்த குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர் எஸ்.பி.ராஜேந்திரன் குடிகாடு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களிடம் மற்றும் செங்கல் சூளையில் பணியாற்றுபவர்களிடமும் கலந்துரையாடினார். மேலும் குழந்தை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் சேர்ந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உங்கள் மாவட்டங்களில் மற்றும் வட்டங்களில் செயல்படும் அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் இயங்கும் வட்ட சட்டப் பணிகள் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்