மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் விழுந்து குழந்தை சாவு:வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் விழுந்து குழந்தை பலியானது தொடர்பான வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-26 19:54 GMT

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் விழுந்து குழந்தை பலியானது தொடர்பான வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆற்றில் விழுந்து குழந்தை சாவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரிடிக்ஸ் சாம்சன் (வயது22). இவர் கடந்த 19-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருடைய 2 வயது மகன் ரோஜரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மதுக்கடைக்கு சென்று உள்ளார். அங்கு மது அருந்திவிட்டு வீரசோழன் ஆற்று கட்டுகரை வழியாக திரும்பி உள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் குழந்தையுடன் ஆற்றில் தவறி விழுந்தார்.

சிறிது நேரத்தில் பிரிடிக்ஸ் சாம்சன் நீந்தி கரையேறினார். மோட்டார் சைக்கிளுடன் குழந்தை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாமன். அன்று இரவே போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ஆற்றில் இறங்கி குழந்தையை தேடும்பணியில் ஈடுபட்டனர்.

வாலிபர் கைது

ஆனால் மறுநாள் காலை குழந்தை சடலமாக மீட்கப்பட்டான். இச்சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குழந்தையின் சாவுக்கு காரணமான பிரிடிக்ஸ் சாம்சனை கைது செய்யக்கோரி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த 24-ந் ஆம் தேதி காலை முதல் மதியம் வரை திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டமும் நடந்தது. அப்போது கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரிடிக்ஸ் சாம்சனை திருவிடைமருதூர் போலீசார் கைது செய்து திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்