செஞ்சி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு நிலத்தில் உழவு பணி செய்த போது சோகம்

செஞ்சி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தாள்.

Update: 2022-11-19 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி அருகே வேலந்தாங்கல் அருகே உள்ள மதுரா நார்சாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சவுரியப்பன் மகன் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ். இவர் நேற்று தனது உறவினர் டிராக்டரில், நிலத்தை நெல் நடவு பணிக்காக தயார் செய்வதற்கு உழவு பணி மேற்கொண்டார்.

அப்போது, தனது குழந்தையான ஐஸ்வர்யா(வயது 3) என்பவரையும் டிராக்டரில் அமர வைத்திருந்தார். இந்நிலையில், திடீரென குழந்தை ஐஸ்வர்யா டிராக்டரில் இருந்து தவறி, கீழே விழுந்தாள். அதில், டிராக்டரில் இருந்த இரும்பு சக்கரத்தில்(ரொட்டோவேட்டர்) சிக்கிய, குழந்தை படுகாயம் அடைந்தது. இதனால், பதறி போன அருள் தனது மகளை தூக்கிகொண்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்துபோனார். இதை பார்த்ததும் அவரது தந்தை மற்றும் தாய் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தந்தையின் கண் எதிரே, டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய குழந்தை உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்