கலால் உதவி ஆணையருக்கு தலைமை செயலாளரின் பதக்கம்
கலால் உதவி ஆணையருக்கு தலைமை செயலாளரின் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார்.;
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இவ்வாறு வரப்பெற்ற 251 மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொடிநாள் வசூலில் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்த கலால் துறை உதவி ஆணையர் குருசந்திரனுக்கு தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். வெளிநாடு வாழ் இலங்கை தமிழர் நலத்துறையின் கீழ் ஒருவருக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கினார்.