தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை

ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர்

Update: 2024-04-23 10:16 GMT

சென்னை,

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகிறது

இந்நிலையில் கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர் .கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையின்றி குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்