அடையாறு நீரேற்று நிலையத்தில் தலைமை செயலாளர் ஆய்வு

அடையாறு நீரேற்று நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update:2023-06-26 10:07 IST

சென்னை, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட ஏ.ஜி.எஸ்.காலனியில் உள்ள நீரேற்று நிலையத்தை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள அதிகாரிகளை விழிப்புணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், பாதுகாப்பான முறையில் நீரேற்று நிலையத்தை பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், தலைமை என்ஜினீயர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்