ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு

காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-11-22 19:30 GMT

காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு முதன்மை செயலாளர்

தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், தொழிலாளர் நல ஆணையரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் நேற்று இரவு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தார்.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகள் குறித்து காரியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் ஊராட்சித் துறையில் சார்பில் நிறைவேற்றப்படும் திட்ட பயனாளிகளின் விவரம், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

மருந்து மாத்திரைகள் இருப்பு

இதைத் தொடர்ந்து காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நோயாளிகளின் விவரம் மற்றும் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் விவரம் குறித்து விசாரித்தார். மேலும் நோயாளிகளுடன் மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருந்து, மாத்திரைகளின் இருப்பு விவரம் மற்றும் ஆறாம் பாஸ் சுகாதார நிலையத்திற்கு தேவையான திட்டம் என்ன என்பது குறித்து டாக்டர்களிடம் ஆகி நடத்தினார்.

இதை தொடர்ந்து அவர் பெரியாம்பட்டி சமத்துவபுரம், தர்மபுரி அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, தொழிலாளர் நல உதவி ஆணையர் முத்து, காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, தாசில்தார் சுகுமார் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்