சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும்இளைஞர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-11 18:45 GMT


தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்பட்டு வருகிறது.

15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப்பத்திரம், பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2023-ம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது வருகிற 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

எனவே இவ்விருதுகள் பெறுவது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி மாலை 4 மணியாகும். இதற்கு 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.3.2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

இணையவழியில் விண்ணப்பம்

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளி-கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மேலும் விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்