காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் பெற்றோருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி
காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் பெற்றோருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு, ராஜாமணி தம்பதியின் மகன்கள் தினேஷ் (வயது 21), ராஜேஷ் (16) ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அறிந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் திருச்சி மாநகராட்சி 3-வது மண்டல தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.