6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு..!

6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-13 03:27 GMT

சென்னை,

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க், கோவை மாவட்ட எஸ்.பி., பத்தி நாராயணன், தேனி மாவட்ட எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, சேலம் ரெயில்வே டி.எஸ்.பி., குணசேகரன், நாமக்கல்லைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன், காவலர் குமார் ஆகிய 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்