முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி:வெற்றி பெற்ற போலீஸ் அணியினருக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற போலீஸ் அணியினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-06-28 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் கலந்து கொண்ட தடகள போட்டி, கபடி போட்டி, கைப்பந்து போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாவட்ட அரசு அலுவலர்களுக்கு நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அணியினர் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தையும், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அமைச்சுப் பணியாளர்கள் அணி 3-வது இடத்தையும் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ேபாலீஸ் மற்றும் போலீஸ் அமைச்சுப் பணியாளர்கள் அணியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்