முதல்-அமைச்சர் கோப்பைக்காள விளையாட்டு போட்டிகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான வேலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-09 16:42 GMT

காட்பாடி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான வேலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் கோப்பை

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான வேலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது.

இந்த போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் உள்ள நபர்கள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு போட்டியில் பங்கேற்க 20 ஆயிரத்து 105 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான போட்டிகள் காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் தொடங்கியது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

முதலில் சிலம்ப விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து அதனை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து விளையாட்டு மையம் அருகில் ரூ.10 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதில், 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பாதை வசதி ஆய்வு

மேலும் விளையாட்டு வளாகத்திற்கான சாலை வசதி அமைப்பது குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் சாலை அமைப்பதற்கான மதிப்பீடு தயார் செய்யுமாறு வேலூர் மாநகராட்சி கமிஷனர், பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன் மற்றும் பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்