தென்காசி நகராட்சிக்கு முதல்-அமைச்சர் பரிசு

தென்காசி நகராட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

Update: 2022-08-16 18:19 GMT

தமிழகத்தில் சிறந்த நகராட்சிகளில் தென்காசி நகராட்சி 3-வது பரிசை பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாரிசான் கலந்து கொண்டார். இதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு ஆகியோர் தென்காசி நகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நகர்மன்ற தலைவர் சாதிர் நேற்று தென்காசி நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் நகரசபை ஆணையாளர் பாரிசானும் வந்தார். அப்போது அவர்களை தி.மு.க.வினர் மற்றும் நகராட்சி அலுவலக என்ஜினீயர் ஹரிகரன், மேலாளர் லட்சுமணன், நகரமைப்பு அலுவலர் பொன்னுச்சாமி மற்றும் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக வரவேற்றனர். தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மேள தாளம் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்