பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும் - அண்ணாமலை
பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும்.
தங்களை காப்பாற்றிக்கொள்ள சிபிஐ விசாரணை வேண்டாம் என்பது கோழைத்தனம். தவறு செய்யும்போது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்.
சமூக வலைதளத்தில் உண்மையை பதிவிட்ட எஸ் ஜி சூர்யாவை கைது செய்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள்.
என்று கூறினார்.