முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் வீட்டு காவலில் கைது?
பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
பரமக்குடி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று ராமநாதபுரம் செல்ல இருக்கிறார். ராமநாதபுரம் செல்லும் முதல்வர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து இணையதளத்தில் தவறான கருத்துக்களை பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முத்துலிங்கத்தை போலீசார் வீட்டுக் காவலில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.