1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறையை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

1930 அழைப்பு மையம்/கட்டுப்பாட்டு அறையை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-31 10:49 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கனவே உள்ள அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்படி புதியதாக கூடுதல் 15 பணியாளர்களை (மூன்றாண்டுகளுக்கு ரூபாய் 928.57 லட்சம்) ஒப்பளிப்பு செய்யவும், முதற்கட்டமாக இந்தாண்டிற்கு 310 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் 2023-24ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்திட 928.57 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக வங்கி கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிடவும், பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காத்திடவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம்/கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்