ரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2024-08-04 13:38 IST

சென்னை,

புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Tags:    

மேலும் செய்திகள்