ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-03 05:59 GMT

சென்னை,

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ராஜஸ்தான் மக்களுக்குச் சேவை செய்ய நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்