ஒடிசா மாநில முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ஒடிசா மாநில முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் வாழ்த்து செய்தியில்,
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.