தூத்துக்குடி சிவன்கோவிலில்முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சாமிதரிசனம்
தூத்துக்குடி சிவன்கோவிலில்முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வியாழக்கிழமை சாமிதரிசனம் செய்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வியாழக்கிழமை காலையில் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலுக்கு வந்தார். அங்கு அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் சங்கரராமேசுவரரை வழிபட்டார். கோவில் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு சிவன் கோவில் அருகே உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சரின் மகள் கோவிலுக்கு வருவது ரகசியமாக வைக்கப்பட்டது. மேலும் சாதாரண உடை அணிந்த போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.