மதுரையில் 15-ந் தேதி அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்

அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

Update: 2022-09-12 23:13 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் வருகிற 15-ந் தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 15-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு மதுரை கீழவெளி வீதி-மேலவெளி வீதி சந்திப்பு நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.

வள்ளுவர் கோட்டம்

இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 15-ந் தேதி காலை 8 மணிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொள்கின்றனர்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்