திருமங்கலம் அருகே கப்பலூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரூ.9 கோடியில் மேற்கூரை அமைப்பு -காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருமங்கலம் அருகே கப்பலூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரூ.9 கோடியில் மேற்கூரை அமைக்கப்பட்டது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2023-02-11 20:11 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரூ.9 கோடியில் மேற்கூரை அமைக்கப்பட்டது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மழையில் நனைந்த நெல்

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகள் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்படுவதால் அடிக்கடி மழையில் நனைந்து வீணாகி விடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூடைகளை வீணாகாமல் தடுக்க மேற்கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் என செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு 18000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க முதற்கட்டமாக ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்து தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இதற்கான பணிகள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. முதற்கட்ட பணியில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நான்கு நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நெல் மூடைகளை பாதுகாக்க புதிய கான்கிரீட் தளத்தில் அமைக்கப்பட்ட தகர கொட்டகையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன்பின்னர் கலெக்டர் அனிஷ் சேகர் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் கோட்டாட்சியர் கோட்டை குமார், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், வட்டாட்சியர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்