நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-23 16:34 GMT

சென்னை,

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 85. கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவம்மாவின் உயிர் இன்று பிரிந்தது. கர்நாடக மாநிலம், மைசூரில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக் குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.

தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்