"நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு நெருக்கடி" பாஜகவின் அமலாக்கத்துறையின் செயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,
விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக்கூறிய பிறகும் நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் நுழைந்த விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி உள்ளனர். மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் உறுதியாகத்தொடர்வோம்.அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில்பாலாஜி உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கை சட்டரீதியாக உறுதியுடன் திமுக எதிர்கொள்ளும் என்றும் முதல்-அமைச்சர் அறிகையில் குறிப்பிட்டுள்ளார்.