முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் உடல் நிலை தேறி வருகிறது

டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் தயாளு அம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருகிறது.;

Update: 2023-07-23 05:39 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (வயது 90) சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி அன்று அவருடைய 90 வது பிறந்த நாளை குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் தயாளு அம்மாளுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தயாளு அம்மாள் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்