நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி
நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.;
சென்னை:
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டிட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.25 லட்சம் முதல்-அமைச்சரால் 10-12-2021 அன்று வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கை வழங்கினர். அதனை ஏற்று கட்டிடப் பணிகளுக்காக மேலும் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை, நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ.கிருஷ்ணமூர்த்தியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அவ்வகையில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டிட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.