முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்

கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2023-06-25 19:34 GMT

தாயில்பட்டி,

கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

மருத்துவமனை திறப்பு

வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். விழாவிற்கு கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் கோவில் ராஜா தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) ஜெய பாண்டியன், (கிழக்கு) கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சுந்தர் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

கால்நடை மருத்துவமனை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை அளிக்கும் அறை, ஆய்வாளர்அறை, அறுவை சிகிச்சை அறை, மருந்தகம், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது.

நலத்திட்ட உதவி

இ்ந்த மருத்துவமனை மூலம் செவல்பட்டி, ராமுத்தேவன்பட்டி, குகன்பாறை, சத்திரம், துலுக்கன்குறிச்சி, முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறலாம். தனிநபரின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும், கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு கால்நடை வளர்ப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் இந்த மருத்துவமனைைய சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், கால்நடை உதவி இயக்குனர் பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெம்பக்கோட்டை கால்நடை மருத்துவர் அரவிந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்