முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் வருகிறார்.;

Update: 2022-09-07 20:00 GMT

விருதுநகர், 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் மதுரைக்கு செல்லும் வழியில் மதியம் விருதுநகர் வருகை தருகிறார். விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் நிறுவன விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அவர் மதுரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்