ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2022-08-17 07:59 GMT

புதுடெல்லி,

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுள்ளார். புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சுமார் 20 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் டெல்லியிலுள்ள அமைந்துள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது.

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.பிரதமரை சந்திக்கும் போது நீட் தேர்வு , புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை உள்ளேன் என முதல் அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்