பள்ளி, விடுதி கட்டிடங்களை இன்று திறந்துவைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆதி திராவிடர் மாணவர்களுக்கான பள்ளி கட்டிடம் மற்றும் விடுதி கட்டிடங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.;
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதி திராவிடர் மாணவர்களுக்கான பள்ளி கட்டிடம் மற்றும் விடுதி கட்டிடங்களை இன்று திறந்துவைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10.45 மணிக்கு காணொலி வாயிலாக முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார்.
மேலும், மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளங்கள், துறைமுகம், மற்றும் அலுவலக கட்டிடங்களை அவர் திறந்துவைக்கிறார். அத்துடன், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தையும் முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார்.