4 மாவட்டங்களில் கள ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

2-ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் நேற்றும், இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-16 10:11 GMT

சேலம்,

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்றும் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றனர்.

அப்போது அரசு அதிகாரிகளின் திறமையான பணி மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியை பார்க்க முடியும் என்றும், மாநில மக்கள் பயனடையும் வகையில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டகளில் கள ஆய்வை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்