சென்னை போரூரில் ஜப்பானின் ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவன புத்தாக்க மையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு
சென்னை போரூரில் ஜப்பானின் ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவன புத்தாக்க மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை போரூரில் ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவனம் அமைத்துள்ள தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
இதன் மூலம் எரிசக்தி துறையில் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் இம்மையம் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,
ஜப்பான் நாடு முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மேலும் முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல பொருளாதார குழுவுடன் ஆலோசித்து பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று அவர் பேசினார்.