சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ள உதயசங்கர், ராம் தங்கத்துக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உதயசங்கர், ராம் தங்கத்துக்கு சாகித்ய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள உதயசங்கர் மற்றும் ராம்தங்கத்துக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டரில் கூறி இருப்பதாவது;
நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின்பொம்மை-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பாலசாகித்ய புரஸ்கர் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்;
இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ சாகித்ய புஸ்கர் விருது பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.