ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்கு 200 கார்கள் - முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

200 புதிய கார்களை வழங்கிடும் அடையாளமாக 12 கார்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;

Update:2023-05-10 22:35 IST

சென்னை,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் 30 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாக கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு முதல்கட்டமாக 25 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகின்றன. இதன் அடையாளமாக 12 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்