சிதம்பரம் பழைய நீதிமன்றத்தில் இரும்பு கதவு திருட்டு
சிதம்பரம் பழைய நீதிமன்றத்தில் இரும்பு கதவு திருடியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் கச்சேரி தெருவில் ஏற்கனவே நீதிமன்றம் இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் அருகே சி.முட்லூரில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு நீதிமன்றம் மாற்றப்பட்டது. இந்தநிலையில் சம்பவத்தன்று பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்த சுழல் இரும்பு கதவை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். திருட்டு போன சுழல் இரும்பு கதவின் மதிப்பு ரூ.13 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கதவை திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.