சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

என்.எல்.சி.யை கண்டித்து சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-03 19:22 GMT

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் வளையமாதேவி உள்ளிட்ட சில கிராமங்களில் சுரங்க விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை அழித்து என்.எல்.சி. நிர்வாகம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நெற்பயிர்களை அழித்த என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்தும், வாய்க்கால் வெட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்