சிதம்பரம் நகரமன்ற கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது

சிதம்பரம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

Update: 2022-10-06 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் நகரமன்ற கூட்டம் சிதம்பரம் நகரமன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், வெங்கடேசன், அப்பு.சந்திரசேகர், ராஜன், ரமேஷ், தில்லை ஆர்.மக்கின், மணிகண்டன், ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், அசோகன், ராஜா, தஸ்லிமா, தரணி அசோக், இந்துமதி அருள், லதா உள்பட 33 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், பன்றிகள், மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதனை தடுக்க வேண்டும்.

சிதம்பரம் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் நகரமன்ற தலைவருக்கு எந்த தகவலும் தராமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார்கள்.

நகராட்சியில் மேலவீதி பகுதி, சிதம்பரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடிநீர், கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவுன்சிலர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் செந்தில்குமார் பேசுகையில், அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக சரி செய்யப்படும், நகராட்சி ஊழியர்கள் வார்டு வாரியாக கொசு மருந்து அடிப்பதோடு, நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்