நெல் சாகுபடிக்குப்பின் பயறு, உளுந்து தெளிப்பது குறித்து பயிற்சி
நெல் சாகுபடிக்குப்பின் பயறு, உளுந்து தெளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வயல்களில் நெல் சாகுபடிக்குப்பின் உளுந்து, பயறு வகைகள் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நன்னிலம் பகுதியில் உள்ள தட்டாத்திமூலை, நாடாகுடி, சொரக்குடி, மகிழஞ்சேரி உள்ளிட்ட 13 கிராமங்களில் நடந்தது. இதில் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறுகையில், 'பயறு மற்றும் உளுந்து தெளிப்பவர்கள் ஏ.டி.டி.5, வி.பி.என்.8 ரக உளுந்து விதைகள், கோ.8 ரக பாசி பயறுகளை நன்னிலம், திருவாஞ்சியம், பேரளம், பாவட்டக்குடி ஆகிய இடங்களில் உள்ள வேளாண் விரிவாக்கம் மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். இவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது' என்றார்.