செட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

பரமக்குடி அருகே செட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-06-29 19:13 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீசெட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கோவில் முழுவதும் புனரமைக்கபட்டு அனைத்து தெய்வங்களின் கோபுரங்களுக்கு சிற்ப வேலைப்பாடுகளுடன் கோவில் கோபுரம் முழுவதும் வர்ணம் தீட்டப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி விக்னேஸ்வர பூஜை கோபூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம், விக்கிரக பிரதிஷ்டை, மருந்து சாத்துதலும் நடைபெற்றது. மேலும் 5 கால யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த நிலையில் மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் தீபாராதனைகளும் நடைபெற்று கடம் புறப்பாடு நடந்தது. பின்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப் பட்டது. பின்பு செட்டி அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அரியனேந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குலதெய்வ குடிமக்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்