ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் காளீஸ்வரி, (பொறுப்பு) செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து வார்டுகளில் திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.