செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா ஒளிபரப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா ஒளிபரப்பு நடைபெற்றது.
கீரமங்கலம்:
செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சிகளை அனைத்து தொலைக்காட்சிகளில் எல்.இ.டி. திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனின் ஆலங்குடி தொகுதியில் பல ஊர்களில் பஸ் நிலையம், கடைவீதிகள் உள்பட பொது இடங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் நின்று பார்த்தனர்.
இதேபோல் திருவரங்குளம் வல்லத்திராகோட்டை கடைவீதி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.